வட மாகாண சபையின் உறுப்பினர்களாக இருவர் சத்தியப் பிரமாணம்

வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்பட்ட இருவெற்றிடத்திற்கு தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு இரு புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாண சபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு கணபதிப்பிள்ளை தர்மலிங்கமும் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவமோகனின் இடத்திற்கு வல்லிபுரம் கமலேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து தமது பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

Related Posts