வட மாகாண ஆளுநர் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம்?

Chandrasiriவட மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினது கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 11 ம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாணசபையினது அமர்வில் உரையாற்றுமாறு வடக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். உத்தியோகபூர்வ இவ்வழைப்பினை கருத்தில் கொண்டு அங்கு கலந்து கொண்டு அங்கு அவர் உரையாற்றவுள்ளார். அதுவே அவரது வடக்கு மாகாணசபையினது பேரவைக்கான ஆளுநரின் இறுதி விஜயமாக இருக்கலாமென கூறப்படுகின்றது.

ஏற்கனவே முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் தற்போதைய ஆளுநர் முன்னாள் படை அதிகாரியென்ற வகையில் அப்பதவிக்கு பொருத்தமற்றவரெனவும் சிவில் சமூகத்தினை சேர்ந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் என பகிரங்கமாகவே கோரியிருந்தார்.

இதேவேளை வெற்றிடமாகவுள்ள வட மாகாண ஆளுநர் பதவிக்கு மாத்தறையிலுள்ள ஓய்வு பற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியொருவர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் பிரச்சினையில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Related Posts