வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பால் கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் அது தொடர்பான நடைமுறைப் பிரச்சணைகளுடன் அதற்கான நிதியீட்டல்கள் தொடர்பினில் ஆராயப்படவுள்ளது.
குறித்த கூட்டத்தினில் வடக்கின் பல பாரிய திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக ஆறுமுகம் திட்டம் , மாங்குளத்திற்கான பரங்கிய குடிநீர்த் திட்டம் என்பவற்றுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மர முந்திரிகை திட்டம் ஆகியவற்றுடன் குருநகர் இறங்குதுறை அபிவிருத்திக்கான நிதி ஈட்டல் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இவற்றுடன் வட மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள 1000 மில்லியன் ரூபாவிற்கான வர்த்தக சொப்பிங் சென்றர் அமைத்தல் , 50 மில்லியன் ரூபாவிலான இரணைமடுக் குளக்கட்டில் அமைக்க எண்ணியுள்ள பூங்கா அனுமதி போன்ற விடயங்களும் ஆராயப்படவுள்ளது.
இவ்வாறு ஆராயப்பட்டு அனுமதிக்கப்படும் பட்சத்தினில் குறித்த திட்டங்கள் விரைவினில் நடைமுறைப்படுத்தப்பட்டு நன்மை ஈட்டும் நிலமை கானப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.