வட மாகாண அஞ்சல் அதிகாரிகளுக்கு வருடாந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ். ஜெபரட்ணம் கொழுப்பு அஞ்சல் திணைக்களத்திற்கு பதவியுயர்வு பெற்று சென்றதையிட்டு, யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக, யாழ். பிராந்திய அஞ்சல் திணைக்கள நிர்வாக காரியாலய அதிகாரி கே. புஸ்பநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய ஏ. சுந்தரலிங்கம் மன்னார் மாவட்ட மேலதிக அஞ்சல் அத்தியட்சகராகவும் அஞ்சல் அத்தியட்சகர் ஜ.சின்னப்பு மன்னார் மாவட்ட பிராந்தி நிர்வாக காரியாலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் வவுனியா மாவட்ட பிரதம தபாலதிபர் டி.எம்.எல். சல்ஹது வவுனியா மாவட்ட பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.