வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கட்டடத்திணைக்களத்தின் ஊடாக வட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களிலும் 55 பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி 10 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட 20 பஸ் நிலையங்களும், 8 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட 35 பஸ் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், யாழ்பணத்தில் 16, மன்னாரில் 10, முல்லைத்தீவில் 10, கிளிநொச்சியில் 10, வவுனியாவில் 9 என்ற வீதத்தில் மொத்தமாக 55 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றின் பணிகள் யாவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.