வட மாகாணத்தில் 15 பிரேரணைகள் நிறைவேற்றம்

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 பிரேரணைகள் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

15 பிரேரணைகளும் பின்வருமாறு…

  1. சிவில் சமூகத்தை சார்ந்தவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்.
  2. வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி சிவில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
  3. கரவெட்டி பிரதேச சபையின் ஒரு பிரிவை நெல்லியடி நகர சபையாக மாற்றப்பட வேண்டும்.
  4. வடமாகாணத்திலுள்ள விவசாய நிலங்களில் இராணுவம் குடியிருப்பதையும் விவசாயம் செய்வதனையும் தடுத்து அந்நிலங்களை உரிய மக்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட வேண்டும்.
  5. வடமாகாணத்தில் மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதுடன் கிரவல் காட்டு மரங்கள் பாதுகாப்பதுடன் அது தொடர்பான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெறப்படும் வருமானங்கள் வடமாகாண சபையின் வருமானங்களாக உள்வாங்கப்பட வேண்டும்.
  6. வடமாகாண சபையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்,
  7. வடமாகாணத்திலுள்ள வீட்டுத்திட்டங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  8. வடமாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் நிரந்த நியமனம் வழங்கப்பட வேண்டும்.
  9. தற்போது நடைமுறையிலுள்ள வீடடுத்திட்டங்கக்கு இலகுவான முறையில் மணல் கிடைப்பதற்கு வழி செய்யப்பட வேண்டும்.(குறிப்பாக கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்)
  10. இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனடியாக வழங்க வழிசெய்யப்பட வேண்டும் (குறிப்பாக வலி.வடக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்)
  11. வடமாகாணத்திலுள்ள அரச காணிகளை காணிகளற்ற அப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  12. வடமாகாண சபையில் காணி விடயம் சம்பந்தமாக சரியான முடிவு எட்டும் வரை தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  13. வடமாகாண சபைக்கான மாகாண திட்டமிடல் குழுவை உரிய முறையில் அமைத்து அதன் மூலம் மாகாண சபையின் அபிவிருத்தியை மேம்படுத்த வேண்டும்.
  14. வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் புனரமைக்கப்படவும் வேண்டும்.
  15. மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடமாடும் சேவைகளை பின் தங்கிய மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்

ஆகிய பிரேரணைகளே நிறைவேற்றப்பட்டன

Related Posts