வட மாகாணத்தில் 119 மூலம் தமிழில் கதைக்கலாம்

தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியுமான விதத்தில், தமிழ் மொழியில் கதைப்பதற்கான ஏற்பாடுகளை 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்தினூடாக செய்து கொடுத்துள்ளதாக வட மாகாண பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸுக்கு வருகை தரும் எந்தவொருவரும் தமது பாஷையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவகாசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts