வட. மாகாணத்தில் பொறியியலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு!

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைக்கு இணைக்கப்பட்ட பொறியியலாளர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே இன்று (புதன்கிழமை) வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 7 பொறியலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராஸ், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஏ.ஏக்ஸ். செல்வநாயகம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts