வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம்!

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் நோக்குடன் இந்த திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts