யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை கோணாவில், யூனியன் குளம், கன்னிகாபுரம், ஸ்கந்தபுரம், விநாயகர் குடியிருப்பு, அக்கராயன் ஆகிய பகுதிகளிலும்,
வவுனியா மாவட்டத்தில் காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை முகாம், மடுக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.