வட மாகாணசபையில் பிரதி அவைத்தலைவரால் பெரும் குழப்பம்!!

வடக்கு மாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் அவையைக் கொண்டு நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த கமலேஸ்வரன் இதனையடுத்து வடக்கு மாகாணசபை அமர்வுக்காக அங்கு விரைந்து வந்தடைந்தார்.

9.30ற்கு ஆரம்பமாக வேண்டிய மாகாணசபை அமர்வு இதனால் 10.45ற்கே சிற்றுண்டி நேரம் முடிவடைந்த பின்னரே தொடங்கியது.

இதேவேளை முதலமைசர் அமைச்சின் நியதிச்சட்டங்கள் ஆராயப்பட இருந்தது. முதலமைச்சரும் சுகவீனம் காரணமாக அமர்வில் பங்குபற்றாத நிலையில் குறித்த அமைச்சின் பொறுப்பு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மாகாண அமைச்சர்கள் மற்றும் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்த நியதிச் சட்டங்கள் தொடர்பக ஆராய வேண்டியிருப்பதை அறிந்த பிரதி அவைத்தலைவர் அது தொடர்பாக தனக்கு போதிய விளக்கங்கள் இல்லை எனத் தெரிவித்து நியதிச் சட்டத்தை அடுத்த அமர்வில் எடுப்பதற்கு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் அமைச்சின் நியதிச் சட்டங்கள் எடுக்கப்பட மாட்டாது என்பதை அறிந்த விவசாய அமைச்சர் சிற்றுண்டி நேரம் நடந்து கொண்டிருந்த போது அவசரமாக வெளி நடவடிக்கைகளுக்காக சென்றுவிட்டார்.

இது தொடர்பாக பிரதி அவைத்தலைவருக்கும் தெரியப்படுத்திவிட்டே சென்றுள்ளார். ஆனால் அமர்வு ஆரம்பித்த போது நியதிச்சட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டிய நிலையில் ஐங்கரநேரன் எங்கே சென்று விட்டார் என எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தவராச கேள்வி எழுப்பி பெரும் சர்ச்சையை உருவாக்கினார்.

ஆனால் கமலேஸ்வரன் குறித்த நியத்திச்சட்டங்கள் தொடர்பில் தனக்கு போதிய விளக்கம் இல்லை என்றதாலேயே அதனை ஒத்தி வைத்தது தொடர்பில் மூடி மறைத்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து அவையில் இல்லாத விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது தாக்குதல் நடாத்துவதை வேடிக்கை பார்த்தார் பிரதி அவைத்தலைவர்.

அவையில் தான் வேண்டுமென்றே தாக்கப்படுவதை கேள்விப்பட்ட ஐங்கரநேசன் அங்கு வந்து சரியான விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது தனக்கு நியதிச் சட்டம் தொடர்பான விளக்கங்கள் இல்லாத காரணம் வெளியாகி விட்டது என்பதை அறிந்து உடனடியாக சபையை ஒத்தி வைத்தார் பிரதி அவைத்தலைவர்..

நியதிச்சட்டம் எடுக்கபடமாட்டாது என நீங்கள் சொன்ன போது உங்களிடம் சொல்லி விட்டுத்தானே சென்றேன். பின்னர் சபையில் ஏன் இது தொடர்பாக நீங்கள் கூறவில்லை என பிரதி அவைத்தலைவரை விவசாய அமைச்சர் கேட்ட போது நான் கூறினேன். ஆனால் அவர்களுக்கு அது கேட்காமல் போய்விட்டது போல் இருக்கின்றது என தெரிவித்த போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.

வட மாகாண அவைத்தலைவர் இல்லாத அமர்வு பெரும் கேலிக்கூத்தாகி விட்டதாகவும் அவைத்தலைவர் இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Related Posts