வட மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு

vickneswaranவடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2014ம் ஆண்டுக்கான வட மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம், 19,481 மில்லியன் ரூபா நிதி வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டவிவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவுள்ளது. வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக சுமார் 19 ஆயிரத்து 481 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Posts