வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்

northவட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், தேர்தலை ஒக்ரோபர் மாதத்தில் நடாத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபை சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்யயும், இடம்பெயர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும் இந்தக் கால அவகாசம் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் அரசாங்கம் அவசர சட்டத் திருத்தங்களை செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வடமாகாண தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறி! – கருணாநிதி

Related Posts