வட மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வெற்றியீட்டும்!- புலனாய்வுப் பிரிவு

tnaவட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் வரதராஜா பெருமாளினால் நிறுவப்பட்டதனைப் போன்று தனியான ஆட்சியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் பொலிஸ் பிரிவு ஒன்றை அமைத்து, காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது.

தமிழ் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதன் பின்னர் வடக்கிலிருந்து படையினரை வெளியேற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் ஊடாக இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts