வட மாகாணக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

வட மாகாணத்தின் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு இன்று வட மாகாண சபையின் பொங்கல் விழாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அமர்வு ஆரம்பிக்கும் முன்னர் வட மாகாண சபையின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதன்போது வட மாகாணக் கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 38 கலைஞர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கலைஞர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts