வடமாகாகண சபையின் பிரதம செயலாளராக முல்லைத்தவு மற்றும் மொனாறாகலை ஆகிய மாவட்டங்களில் முன்னர் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அ.பத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக முன்னர் கடமையாற்றி வந்த திருமதி.விஜயலட்சுமி றமேஸ் இச்சபையின் நிர்வாகச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவருவதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வந்த நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால் சிறிசேன தமையிலான புதிய அரசாங்கம் முன்னாள் அரசாங்க அதிபர் அ.பத்திநாதனை நியமித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் புதிய ஆளுநராக பள்ளிஹக்கார நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சபைக்கு புதிய பிரதம செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பத்திநாதன், கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் ஒன்பது மாதங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிவந்த நிலையில், 2011.11.09 அன்று உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மொனறாகலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பணிஇடமாற்றம் பெற்றிருந்தார்.
இவ்வாறு இவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டபொழுது இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராத லிங்கம் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராசபக்ஷவிற்கு அவசர கடடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.