ஸ்ரீலங்காவின் வட பகுதி அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது.
வட பகுதியில் கனடாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை, கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஸ்ரீலங்கா பிரதிநிதி பீற்றர் பச்சுலர் ஆகியோர் பார்வையிடவுள்ளனர்.
பாற்பண்ணை மற்றும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு கூட்டுறவுத் திட்டங்களை அவர்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா அபிவிருத்தி திட்ட அலுவலகம் கூறியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இவ்வாரம் இந்த திட்டங்கள் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட பகுதியின் பொருளாதார அபிவிருத்தியை பலப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் பங்களிப்புடன் 6 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான திட்டங்களை கனேடிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.