வட நைஜீரியாவில் 20 பெண்கள் போகோ ஹராம் போராளிகளால் கடத்தல்

வட நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிகளால் குறைந்தது 20 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

boko-haram-nigeria-girls-story

மேற்படி போராளிகளால் ஏற்கனவே 200க்கு மேற்பட்ட பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்ட இடத்திற்கு அண்மையிலுள்ள இடத்திலிருந்தே இந்தப் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

பொர்னோ மாநிலத்தில் அமைந்துள்ள கர்கின் புலானி நாடோடிகள் குடியிருப்புக்கு வந்த போராளிகள் துப்பாக்கி முனையில் பெண்களை வேன்களில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவமானது நைஜீரியாவின் வடக்கு – கிழக்கில் போராளிகளின் தாக்குதல்களைத் தடுக்க தவறியுள்ளதாக இராணுவம் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டை அதிகரிப்பதாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கமெரோன் எல்லையிலுள்ள சிபொக் கிராமத்திலிருந்து 200க்கு மேற்பட்ட சிறுமிகளை போகோ ஹராம் போராளிகள் கடத்திச் சென்றமை உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பொர்னோவிலுள்ள பல கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் 50 போராளிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.

Related Posts