Ad Widget

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானியக் கடற்பரப்பில் விழுந்தது

வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பேலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடல் பரப்பில், தரையிறங்கியுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

korea_missile

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இந்த செயலை சினத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேர்ந்த அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று கூறிய அமெரிக்கா, ஒன்று ஏவப்பட்டவுடன் வெடித்தது என்றும், தன்னையும், தனது நேச நாடுகளையும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் தீர்மானங்களுக்கு எதிராக வட கொரியா தொடர்ந்து ஏவிவரும் ஏவுகணைகளில் இது மிகச் சமீபமானது.

முன்னதாக, வட கொரியா தென் கொரியாவிற்குள் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்துவதை எதிர்த்துள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்பு அடுத்த ஆண்டு ஏற்படுத்தப்படவுள்ளது.

Related Posts