ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை உருவாக்கி வருவதாலும் சா்வதேச அளவில் வட கொரியா நீண்ட காலமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட கொரியாவுடன் இராணுவ ஒத்துழைப்புக்கான வாய்ப்புள்ளதாக புடின் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.