வட்டுக்கோட்டை தெற்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு.

vaddu-south-1வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடிப் பகுதியில் உலகதரிசனம் நிறுவனத்தின் 7.5 மில்லியன் ரூபா மற்றும் வலிமேற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

40 ஆயிரம் லீற்றர் கொள்ளவுடைய இந் நீர்தாங்கியூடாக 237 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நன்மையடையவுள்ளனர். இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் இடர்பாடுகளை சந்தித்திருந்த நிலையில் இன் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு நேற்றய தினம் மக்கள் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி சாரதா உருத்திரசாம்பவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், உலக தரிசனம் நிறுவன திட்டப் பணிப்பாளர் றொசாறியோ, பிரதேச செயலர் சோதிநாதன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் பிரதேச இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

Related Posts