வட்டுக்கோட்டையில் பயங்கரம்! கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை, மகள் வைத்தியசாலையில்!!

வட்டுக்கோட்டையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது , கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts