வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரி வளாகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கல்லூரியில் வியாபாரம் வேண்டாம்’, ‘மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்’, ‘கல்லூரியின் மேன்மை பேணப்பட வேண்டும்’ என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி கல்லூரி வீதியின் இருமருங்கிலும் நின்று போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டேவிட் சதானந்தன் சொலமனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.