வடிவேலு, எஸ்.ஜே.சூர்யாவும் விஜய் படத்தில் இணைந்தனர்

‘பைரவா’வை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். ‘தெறி’யின் வெற்றியை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்குகிறது. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிலிட் என்ற பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா ஆகிய மூவர்தான் அவர்கள். இவர்களில் காஜல் அகர்வால், சமந்தா மட்டுமே விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். ஜோதிகாவுக்கு ஜோடி எஸ்.ஜே. சூர்யாதான், விஜய் அல்ல என்பதே லேட்டஸ்ட் தகவல். இந்த விஷயத்தை சொல்லித்தான் ஜோதிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தில் காமெடி கேரக்டரில் நடிப்பதற்கு சத்யன் ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்த மற்றொரு குணசித்திர வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘நண்பன்’, ‘துப்பாக்கி’ முதலான படங்களில் நடித்த சத்யன் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேருகிறார். பைரவா படத்தில் காமெடியனாக சதீஷ் நடித்தார். அதில் அவரது காமெடி படத்துக்கு மைனசாகிவிட்டது. எனவே சத்யனை விஜய்யே சிபாரிசு செய்துள்ளாராம்.

Related Posts