வடிவேலுவின் அடுத்த படம் ‘எலி’?

வடிவேலு நடிக்கும் அடுத்த படத்துக்கு எலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

vadivelu

தெனாலிராமன் படத்துக்குப் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் 1970 காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

எழுபதுகளில் தமிழகத்தில் மேற்கத்திய பாணி அறிமுகமானதை கதைக் கருவாக வைத்துள்ளார்களாம். இதில் நடிக்கும் வடிவேலு, ஒரு எலியைப் போன்ற உடல்மொழி கொண்டவராக வருகிறாராம்.

முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்துக்கு எலி என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

வரும் செப்டம்பர் மாதம், வடிவேலுவின் பிறந்த நாளன்று தொடங்குகிறது ‘எலி’!

Related Posts