வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு

niht-northernவட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் நான்காவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கோப்பாய் கல்வியற் கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த . குருகுலராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் விருந்தினராக கலந்து கொண்டார் .

மற்றும் வட மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கல்வித் தினைக்கள அதிகாரிகள் அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் முதல் தடவையாக வடக்கின் வர்ணவிருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் அகில இலங்கை ரீதியில் விளையாட்டு சங்கங்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் என சுமார் இருநாற்று ஐம்பதுக்கும்மேற்பட்ட வீர வீராங்கனைகளுக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பரிசில்கள் பணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .

Related Posts