“வடமாகாண வல்லவன் ”யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா?

அக்கினி இசைக் குழுவின் இசைச் சமருடன் கூடிய மாபெரும் இறுதிப் போட்டி.“வடமாகாண வல்லவன்”; யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா? எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாத சுவாரஷ்யமான போட்டி.

“தினச்செய்தி”யின் அனுசரணையில் மாபெரும் பரிசு மழை பொழியும் உதைபந்தாட்டத் தொடராக கருதப்படும் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் “வடமாகாண வல்லவன்” உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி( 26.09.2015) இன்று வடமாகாணத்தில் முதன் முறையாக மிகக் கோலாகலமாக நடைபெற உள்ளது.

போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தினச்செய்தியால் வழங்கப்படும் ரூபா 200,000 பணப்பரிசுடன் “வடமாகாண வல்லவன்” என்ற கௌரவமும் வழங்கப்படுவதுடன் இரண்டாவது அணிக்கு ரூபா 100,000 பணப்பரிசும் வழங்கக் காத்திருக்கின்றது.

அத்துடன் மூன்றாம் இடத்தினைப் பெற்ற அணிக்கு ரூபா 50,000 பணப்பரிசு காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவினை மேலும் மெருகூட்ட உதைபந்தாட்ட சமரிற்கு இணையாக நடனக் குழுவினருடன் ஆ.சிவகுமாரின் அக்கினி இசை குழுவினரின் இசைச் சமர் இடம்பெறக் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts