வடமாகாண முதலாவது குறும்பட விழா

short-filimபண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘வடமாகாண முதலாவது குறும்பட விழா’ நேற்று ஞாயிற்றிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பண்பாட்டு ஆலுவல்கள் திணைக்களத்தினால் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் 34 குறும்படங்கள் கலந்துகொண்டிருந்தன. இதில் 10 படங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த படங்களில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வட மாகாணத்தில் உள்ள சிறந்த கலைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக பயிற்சிகளை வழங்கி சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் பண்பாட்டு ஆலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீதேவி மற்றும் பண்பாட்டு ஆலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts