வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டிவிட்டால், அவர் மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, அதைவிட வேறு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் கடவத்தை விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினராலேயே வடக்கு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்குமாகாண முதலமைச்சர் இனவாதக் கருத்துக்களை பரப்பி தூண்டிவிட முயற்சித்தால் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும்.
அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மட்டுமல்ல அதையும் தாண்டி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.