வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வு இடைநிறுத்தம்

stopped-workingவடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III க்கான நேர்முக தேர்வு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நேற்முக தேர்வு நடைபெற்று நேற்று காலை தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் திடீரென மேலிடத்து உத்தரவால் நிகழ்வு இடைநிறுப்பட்டது

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாழின் பல பாகங்களில் இருந்தும் தமக்கான நியமன கடிதங்களை பெற்று கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

இவர்களுக்கான நியமனங்கள் வடமாகாண சபை தேர்தலின் பின்பே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

இதனால் தேர்தல் நிலவரங்கள் இவர்களின் நியமனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts