வடமாகாண பேரவை செயலாளராக அ.சிவபாதம் நியமனம்

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கே.கிருஸ்ணமூர்த்தி, தனது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அப்பதவியிலிருந்து விடைபெற்றதை அடுத்தே, அப்பதவி வெற்றிடத்துக்கு அஇசிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண கட்டிட தொகுதியில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது இந்த பதவி மாற்றம் பற்றி அறிவிக்கப்பட்டது.

புதிய பேரவை செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் இன்று புதன்கிழமை (10) முதல் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபை 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கிருஸ்ணமூர்த்தியே வடமாகாண பேரவை செயலாளராக கடமையாற்றி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts