கிளிநொச்சி காக்கை கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் என்பவர் காலை இழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த பிரதம செயலாளருடைய வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பிரதம செயலாளருடைய வாகனத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.