வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை – கல்வி அமைச்சர்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண  கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன்  செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts