வடமாகாண தொழில் முயற்சியாளர் விருது 2014

Awards_pngகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்காக சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவு தொழில்துறைகள் இனங்காணப்பட்டு 18 விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கைத்தொழில் உற்பத்தி, பொறியியல் சேவை, சுற்றுலாத்துறை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், அச்சுப்பதிப்புத்துறை, விவசாயம், மற்றும் சேவை துறை உள்ளிட்டவையினை உள்ளிடக்கியதாக இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வடமாகாணத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதுடன், தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவித்து அவர்களது தொழில் விரிவாக்கத்திற்கு மேலும் சாத்தியமான வழிமுறைகளுடாக வாய்ப்புக்களை வழங்குவதே இந்த விருது வழங்கின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

இந்த விருதிற்கான வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள, பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் இந்த விருதுக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்டங்களிலுள்ள வர்த்தக சம்மேளனங்களில் பெற்று எதிர்வரும்30 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கும்படி அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts