வடமாகாண தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்களின் நிரந்தர நியமனத்தினை உடன் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தனர்.

இப்போராட்டம் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

கடந்த 05 மாதம் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் நிரந்தர நியமனத்தினை வழங்க வலியுறுத்தி நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினால் இன்று வரை உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று வரை சாதகமான பதில் எதுவும் ஆளுநரினால் வழங்கப்படவில்லை என்று கூறி இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுவோம் என்று இதன் போது தொண்டராசியர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு வருகை தந்த வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், உங்களின் பிரச்சினையினை எதிர்வரும் 04ம் திகதி ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்ததுடன், எல்லாவற்றையும் கடவுளிடம் முறையிடுங்கள் என்று ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

Related Posts