வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடத்த தடை விதித்து வடமாகாண சபையில் புதிய நியதி சட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்க உள்ளது.
வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த நியதி சட்டம் தொடர்பில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அறிவித்தார்.