வடமாகாண தடகள மைதான நிகழ்வுகள் ஆரம்பம்

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் விளையாட்;டுப் போட்டிகளின் தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

north-sports

இந்தப் போட்டிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் தொடர்ந்து எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி போட்டிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும், நான்காம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்று முடிந்தன.

5 ஆம் கட்டப் போட்டிகளான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை (23) முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது.

இது வரையிலும் நடைபெற்ற 4 கட்டப் போட்டிகளிலும் யாழ்ப்பாணக் கல்வி வலயம் 715 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வேறுபட்ட தன்மையுடையன – வடமாகாண முதலமைச்சர்

Related Posts