வடமாகாண தடகள போட்டியில் முதலிடம் பெற்றது யாழ்.மாவட்டம்

வடமாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் சனி,ஞாயிறு தினங்களில் நடைபெற்ற வடமாகாணத்தை சேர்ந்த மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் யாழ்.மாவட்ட அணி 249 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டது.

177 புள்ளிகளை பெற்று வவுனியா மாவட்டம் 2ம் இடத்தினையும்,90 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டம் 3ம் இடத்தினையும் பிடித்தது.

மேலும் இந்த வருடத்திற்கான சிறந்த ஓட்ட வீரராக யாழ்.மாவட்ட அணியைச் சேர்ந்த சதீஸனும்,சிறந்த ஓட்ட வீராங்கனையாக வவுனியா மாவட்ட அணியைச் சேர்ந்த லேகாசினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேவேளை சிறந்த தடகள வீரராக யாழ்.மாவட்டத்தின் வி.யஸ்மினன் தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts