நிரந்தர நியமனம் கோரி வடமாகாண சபை முன்பு தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 09.00 மணி முதல், வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, வவுனியா வடக்கு மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக நியமனம் கிடைக்கும் என எதிர்பார்த்தும் இன்று வரை கிடைக்காமையாலேயே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இதில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.