வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை செய்யப்படுவார் என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கு அரசின் முக்கிய முதன்மை வேட்பாளராக நான் களம் இறங்குகின்றேன்.
எனது அரசியல் பயணத்தை விரும்பாத சில தென்பகுதி அரசியல்வாதிகளின் நோக்கத்தை நான் நன்கு அறிவேன்
வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்த பிரபலயங்கள் களத்தில் இறக்கப்படவுள்ளனர்.
இதில் முதன்மைப் பேச்சாளர் பட்டியலில் தமிழினி இடம்பிடித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக களம் இறக்கப்பபடலாம் என நினைக்கின்றேன்.
உண்மையில் வடமாகாண சபைத் தேர்தல் களம் பாரிய நெருக்கடிகளைக் கொண்டதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த தேர்த்தல் களத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என்றார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியலில் குதிக்கின்றேன்!- தயா மாஸ்டர்
தயா மாஸ்டரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது!:- சரத் பொன்சேகா