வடமாகாண சபை தேர்தலுக்கு இப்படியும் வாக்குச் சேகரிப்பு நடைபெறகிறது!

GA Chandrasiriவட மாகாண சபை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக அரச தரப்பு வேட்பாளர்களும், ஆதரவாளர்களாலும் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே.

இந்நிலையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்பட்டுவரும் இடர் உதவிக் கடனையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு அரச தரப்பு முனைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அவசர தேவைகள் ஏற்படும் பட்சத்தில் தமது 10 மாதத்திற்குரிய சம்பளத்தினை அரச ஊழியர்கள் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இதனை 100 தவணைகளில் கட்டி முடிக்கும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

இதற்காக ஏற்கணவே விண்ணப்பித்துள்ளவர்களை இன்றயை தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து அவர்களுக்கான இடர் உதவிக்கடனை ஆளுநர் வழங்கவுள்ளார்.

இதனை ஒரு தேர்தல் பிரச்சாரமாக காட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக வவுனியா போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts