மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.