வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு, வட்டுவாகலில் கோத்தாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் அழைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்ற பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர். அவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுகிறார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரைக் கடமையில் ஈடுபடவிடாமல் தடுத்தனர் என மாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிலருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

Related Posts