வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது.

ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை யார் என அடையாளப்படுத்தியபோது,”அது எமக்கு நன்றாகத் தெரியும்” என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சோதனை முடிந்த பின்னர் ரவிகரனும் இதுகுறித்து தனது கண்டனங்களை கடற்படையினரிடம் நேரில் வெளிப்படுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts