வடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்சமாக அதிகரிப்பு

business-money-develpment-cashவடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நூலகத்தில் நேற்று வடமாகாணசபை முதலமைச்சர், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு என ஒதுக்கப்படும் நிதி 20 லட்சமாக காணப்பட்ட நிலையிலேயே 2014 ஆம் ஆணடுக்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு வடமாகாண சபை முதலமைச்சருக்கு 60 லட்சமாகவும் வடமாகாண சபை அமைச்சருக்கு 50 லட்சமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts