வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்!

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவான சின்னத்துரை தவராசா அவர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

thavarasa

வடமாகாண சபையில் வெற்றிடமாக இருந்த உறுப்பினர் பதவிக்குத் தெரிவான சின்னத்துரை தவராசா அவர்கள் நேற்று மாலை 5.00 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

இதன் போது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர் தவநாதன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts