வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் இன்று முக்கியமாக இரண்டு விடயங்களில் கவனிப்புடன் இருக்கின்றார்கள் ஒன்று வடக்கு மாகாண சபை என்ன செய்கின்றது என்பது மற்றையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதாகும்.
ஆனால் நாங்கள் ஒரு அதிகாரமற்ற மாகாண சபையிலேயே பதவியேற்றிருக்கின்றோம். இந்த வடக்கு மாகாண சபையை முழுமையாக இயங்க விடாமல் அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
முதலமைச்சர் மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் சில வேலைகளைச் செய்து வருகின்றார். அவர் அந்தக்
கடமைகளை சரியாக நிறைவேற்றுவார் என்கின்ற நம்பிக்கை சபையிலே இருக்கின்ற எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.” என புளொட் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.