வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர்

vicky0vickneswaranவடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவின் துணுக்காய் மாந்தை கிழக்கு பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

மாந்தை கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தக் குழுவினர் கேட்டறிந்துக் கொண்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேசத்தில் இயங்கிவரும் இரண்டு கருங்கல் குவாரிகளையும் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் துணுக்காய் பிரதேச சபையில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை தமிழினத் துரோகி என கூறுகின்ற போதிலும் வடமாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழினத் துரோகிகள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts