வடமாகாண சபையை அரசு கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் – டக்ளஸ்

வடமாகாண சபையினை அரசாங்கம் (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Daklas

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போதே டக்ளஸ் மேற்குறித்த கருத்தினைத் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ‘நீங்கள் கூறுவதினைப் பார்த்தால் வடமாகாண சபை கிடைக்கவில்லையென தற்போது பழிவாங்குவது போலல்லவா இருக்கின்றது?’ என்று கேள்வியெழுப்பினார்.

சுதாகரித்துக் கொண்ட டக்ளஸ், ‘அப்படியில்லை, அரசாங்கக் கட்சி வடமாகாண சபையினைக் கைப்பற்றியிருந்தால் வலி. வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும். தற்போதும் ஒன்றுமில்லை. மாகாண அரசும் மத்திய அரசும் இணைந்து வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளலாம்’ என விளக்கமளித்தார்.

Related Posts