வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது.
“வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அமர்வு 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற அமர்வுகள் வரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
மாகாணசபையின் ஆட்சிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன்படி வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.